(நா.தினுஷா)

கல்வித் துறையில் இடம்பெறும் அரசியல் பழிவாங்கள் நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தக் கோரி 11 தொழிற்சங்கங்களை உள்ளடக்கிய கல்வியை பாதுகாப்பதற்கான வன்மையாளர்களின் ஒன்றிணைவு என்ற அமைப்பினர் எதிர்வரும் 26 ஆம் திகதி அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தல் ஈடுபடவுள்ளதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த அமைப்பின் செய்தியாளர் மாநாடு இன்று கொழும்பு தொழிற்சங்க நிபுனர்களின் சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் கலந்துகொண்ட கல்வித்துறை தொழிற்சங்கங்களின் பிரமுகர்களே இந்த எச்சரிக்கையினை விடுத்தனர்.

தங்களது அடையாள வேலை நிறுத்த போராட்டத்திற்கான கோரிக்கையை உரியமுறையில் கவனத்திற் கொடுத்து அரசியல் பழிவாங்களை நிறுத்துவது தொடர்பில் சாதகமான பதில் கிடைக்காவிட்டால் அடுத்த கட்ட போராட்ட நடவடிக்கை குறித்து தீர்மானிக்கப் போவதாகவும் அவர்கள் அறிவித்துள்ளனர்.

அத்துடன் இப் போராட்டத்தினை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் முன்னெடுக்க தீர்மானித்துள்ளதனால் நடைபெறவிருக்கும் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையும் பாதிப்படையும் எனவும் அவர்கள் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளனர்.