அடுத்த வருடம் ஜனவரி 26 ஆம் திகதி இடம்பெறவிருக்கும் குடியரசு தினவிழாவில் கலந்து கொள்ளுமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது.

ஒவ்வொரு வருடமும் ஜனவரி 26 ஆம் திகதி இடம்பெறும் குடியரசு தினவிழாவில் வெளிநாட்டு தலைவர்கள் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொள்கிறார்கள்.

இந்நிலையில் ட்ரம்ப்புக்கு முன் அமெரிக்க ஜனாதிபதியாக இருந்த ஒபாமா டெல்லி வந்து இந்தியாவின் குடியரசு தினவிழாவில் பிரதமர் மோடியுடன் கலந்து கொண்டார். 

தற்போது ட்ரம்ப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக இந்திய தூதரகம் மூலம் அமெரிக்காவுக்கு கடிதங்கள் அனுப்பப்பட்டு உள்ளன. பல சுற்றுக்களாக கடிதப்பரிமாற்றம் நடைபெற்று வருகிறது.

இந்தியாவின் அழைப்பை ஏற்பது பற்றியோ, டிரம்ப் வருகை பற்றியோ இன்னும் அமெரிக்கா அதிகாரப்பூர்வ தகவல் எதையும் வெளியிடவில்லை. என்றாலும் டிரம்ப் இந்தியா வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதென தெரிவிக்கப்படடுள்ளது