(எம்.எம்.மின்ஹாஜ்)

எதிரவரும் காலங்களில் எத்தகைய போராட்டங்கள் வந்தாலும் அதனை முறியடித்து மரண தண்டனை சட்டத்‍தை அமுல்படுத்தி, நாட்டு மக்களின் நலனை பாதுகாப்போம் என அனர்த்த முகாமைத்துவம் மற்றும் நிர்பாசன இராஜாங்க அமைச்சர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,

பாரியளவிலான போதைப்பொருள் கடத்தற்கார்ர்களுக்கு மரண தண்டனை விதிப்பதற்கு அமைச்சரவையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யோசனை முன்வைத்துள்ளார். அத்துடன் கண்டியில் நடைபெற்ற நிகழ்வின் போது மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் ஆவணத்தில் கையொப்பமிடுவேன் என அதிரடியாக கூறியுள்ளார். இது போதைப்பொருளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கான சிறந்த வழியாகும். 

இந்த சந்தர்பத்தில் மரண தண்டனைக்கு எதிராக நாடுபூராகவும் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரம் என போராட்டம் நடத்த ஒரு சிலர் முற்படுவர். எனினும் எத்தகைய போராட்டங்கள் நடந்தாலும் மரண தண்டனை சட்டத்தை இரண்டு கோடி மக்களின் நலனுக்காக அமுல்ப்படுத்துவோம் என்றார்.