நவாஸ் ஷெரிப் பேரன்கள் கைது

Published By: Digital Desk 4

13 Jul, 2018 | 03:50 PM
image

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்-ஐ கைது செய்ய லாகூரில் பொலிஸார் காத்திருக்கும் நிலையில் அவரது பேரன்களை லண்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர். 

பனாமா லீக்ஸ் விவகாரத்தில் தண்டிக்கப்பட்டு பிரதமர் பதவியை இழந்த நவாஸ் ஷெரிப் தற்போது அவ்வழக்கில் மேல்முறையீட்டு விசாரணையை சந்தித்து வருகிறார். இந்நிலையில், ஊழல் செய்த பணத்தில் லண்டனின் அவன்பீல்ட் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டியதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது.

இந்த வழக்கை விசாரித்து வந்த தேசிய பொறுப்புடைமை நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. நவாஸ் ஷெரிப் மீதான குற்றம் உறுதியானதால் அவருக்கு 10 ஆண்டுகள் தண்டனையும், அவரது மகள் மர்யம் நவாஸ்க்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், லண்டனில் உள்ள நவாஸ் ஷெரிப்புக்கு சொந்தமான அவன்பீல்டட வீட்டின் முன்னர் பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் இம்ரான் கான் தலைமையிலான தெஹ்ரிக் இ இன்சாப் கட்சியினர் சிலர் நேற்று முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களில் சிலர் நவாஸ் ஷெரிப், அவரது மகள் மரியம் ஷெரிப் மற்றும் மரியம் ஷெரிப் மகன்களான ஜுனைத் மற்றும் மைத்துனர் ஜக்கரியா ஆகியோருக்கு எதிராக முழக்கமிட்டனர். அவர்களில் ஒருவர் ஜுனைத், ஜக்கரியாவுக்கு எதிராக தகாத வார்த்தைகளை பிரயோகித்தார் இதனால் ஆவேசமடைந்த ஜுனைத் மற்றும் ஜக்கரியா வீட்டில் இருந்து வெளியேவந்து போராட்டக்காரர்களின் சட்டையை பிடித்து சரமாரியாக தாக்கினர்.

தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அங்கு காவலுக்கு நின்றிருந்த பொலிஸாரிடம் புகார் அளித்தனர். இதையடுத்து, ஜுனைத் மற்றும் ஜக்கரியாவை கைது செய்த பொலிஸார், அவர்கள் இருவரையும் வாகனத்தில் ஏற்றி அருகாமையில் உள்ள பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்த நவாஸ் ஷெரிப்பின் மகள் மரியம், ‘போராட்டக்காரர்கள் பயன்படுத்திய கெட்ட வார்த்தைகளை கேட்டவர்கள் யாராக இருந்தாலும், பொறுமையை இழந்து என் மகன் செய்த காரியத்தைதான் செய்திருப்பார்கள்’ என குறிப்பிட்டுள்ளார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52