பிலிப்பைன்ஸை பின்பற்றி இலங்கை போதைப்பொருள் வர்த்தகத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளதை அந்த நாடு வரவேற்றுள்ளது.

பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியின் பேச்சாளர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.

எங்களின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தை ஏனைய நாடுகள் கருத்தில் எடுத்துள்ளமை குறித்து நாங்கள்  மகிழ்;ச்சியடைகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.சட்டவிரோத போதைப்பொருள்களை கட்டுப்படுத்துவதற்கான சிறந்த வழிவகையாக அவர்கள் எங்களின் அணுமுறையை கருதுகின்றனர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் அதனை பாராட்டுகின்றோம் ஆனால் நாங்கள் மரணதண்டனையை நடைமுறைப்படுத்தவில்லை எனவும் பிலிப்பைன்ஸ் அதிகாரி தெரிவித்துள்ளார்.

மரணதண்டனை விதிக்கும் நிலையை நாங்கள் இன்னமும் அடையவில்லை எங்கள் சட்ட அமுலாக்கல் பிரிவை பயன்படுத்தியே போதைப்பொருளிற்கு எதிரான நடவடிக்கையை முன்னெடுக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிலிப்பைன்சின் போதைப்பொருளிற்கு எதிரான யுத்தத்தில் 4354 பேர் கொல்லப்பட்டுள்ளனர் 102,630 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனவும் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.