“யார் அந்த கருப்பு ஆடு” என்ற திரைப்படத்தில் இளம் கதாநாயகன் விவன் ஜோடியாக விஜய் டிவி புகழ் சுனிதா கோயோக்  நடித்திருக்கிறார்.

இளம் தயாரிப்பாளர் விவன், எழுதி தயாரித்து கதாநாயகனாக நடிக்கும் 'யார் அந்த கருப்பு ஆடு' அடல்ட் காமடி படம் ஜுலை மாத இறுதியில் திரைக்கு வரவிருக்கிறது. 

'கரடி-ராஜா' பலான கதையை அடிப்படையாகக் கொண்டு உருவாகியிருக்கும் இப்படத்தின் ஜுலியைப் போட்டது யார்...? என்னும் ப்ரோமோ பாடல் சமீபத்தில் படமாக்கப்பட்டது. 

இப்பாடலில் விஜய் தொலைக்காட்சியின் 'ஜோடி நம்பர் 1' நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுனிதா கோகாய் சூடாய் நடனமாடியிருக்கிறார். 

'டிங்கு டாங்கு டிங்கு... அவஜந்து போச்சு ரிங்கு...' என்று தொடங்கும் இப்பாடல் படத்தின் அடிப்படைக் கதையை ஒரு பாடல் வடிவில் விளக்கும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது.

'அடல்ட் காமடி' என்றால் ஆபாச காமடி என்று அர்த்தமில்லை. வயது வந்த இளைஞர்கள் அன்றாட வாழ்வில் ஜாலியாக சிரித்துப் பேசும் இயல்பான உரையாடல் முறையை அப்படியே பயன்படுத்துவதுதான் இது. இவ்வகைப்படங்களை இப்போதைய இளம் பார்வையாளர்கள் பெரிதும் ரசிக்கிறார்கள். அந்த வகையில் இந்தப் படமும் இந்தப் பாட்டும் என்னுடைய திரைப்பட முயற்சியில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமையும்' என்கிறார் சுனிதா கோகாய்.

'சமீபமாக பெரிய பெரிய படங்களாக வந்து வெற்றி பெறாமல் விநியோகஸ்தர்களும், திரையரங்க உரிமையாளர்களும் கையைச் சுட்டுக்கொண்டிக்கும் இக்காலகட்டத்தில் 'யார் அந்தக் கருப்பு ஆடு' படம் எல்லோருக்கும் இலாபமான படமாகவும் இளைஞர்களின் மனம் கவரும் வகையில் முழுமையான பொழுதுபோக்குப் படமாகவும் இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை!' என்கிறார் படத்தின் நாயகன், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளரான விவன்.