இலங்கைக்கு வந்துள்ள இந்திய வெளியுறவுத்துறை  செயலாளர் விஜய் கோகலே இன்று பிற்பகல் 3.00 மணியளவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான நடவடிக்கைகள் மற்றும் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள், யுத்த பாதிப்புக்குள்ளான பகுதிகளின் அபிவிருத்தி தொடர்பாகவும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது.