கிளிநொச்சி - தர்மபுரம் பொலிஸ்பிரிவில் வைத்து சுமார் 90 இலட்சம்  பெறுமதியான வலம்புரிச் சங்குடன் இருவர் கைதுசெய்யப்பட்டிருப்பதாக கிளிநொச்சி விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர். 

தமக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் செய்தபொழுது இரு வலம்புரிச் சங்குடன்   இரு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக தெரிவித்தனர். 

இது குறித்து மேலும் தெரிவித்ததாவது,

வலம்புரிசங்கை கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலிருந்து  கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவருக்கு விற்பனை செய்வதற்கு வைத்திருந்ததாக ஆரம்பகட்ட  விசாரணைகள் மூலம் அறியமுடிகிறது என விசேட அதிரடிப்படையினர்  தெரிவிக்கின்றனர் 

 கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த இருப்பதாகவும்  விசேட அதிரடிப்படையினர் தெரிவிக்கின்றனர்