மன்னார் பொது வைத்தியசாலை பிரதான வீதி செபஸ்தியார் பேராலயப் பகுதியில் அமைந்துள்ள பல்பொருள் விற்பனை நிலையத்தில் இன்று அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

குறித்த பல்பொருள் விற்பனை நிலையம் நேற்று இரவு 10.30 மணியளவில் மூடப்பட்ட நிலையில், இன்று) காலை மீண்டும் திறக்க முற்பட்ட போதே குறித்த விற்பனை நிலையம் திருடர்களினால் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

-குறித்த விற்பனை நிலையத்தின் முன் கதவின் பூட்டுகள் உடைக்கப்பட்டு கதவினை திறந்து உள்ளே சென்ற திருடர்கள் தொலைபேசி மீள் நிறப்பு அட்டைகள்,புகை பொருட்கள் மற்றும் பணம் என ஒரு இலட்சம் ரூபாய் பெறுமதியா. பொருட்கள் திருடிச் செல்லப்பட்டுள்ளதாக குறித்த விற்பனை நிலைய உரிமையாளர் தெரிவித்தார்.

-குறித்த சம்பவம் தொடர்பாக குறித்த விற்பனை நிலையத்தின் உரிமையாளர் இன்று காலை மன்னார் பொலிஸ் நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு செய்த நிலையில் மன்னார் பொலிஸார் அங்கு சென்று விசாரனைகளை மேற்கொண்டுள்ளனர்.

குறித்த வீதியில்,எந்த நேரமும் மக்களின் நடமாட்டம் உள்ள நிலையில், இந்த துனிகர திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளமை அப்பகுதி மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.