(கலைச்செல்வன்)

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் இன்று பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

பனாமா கேட் ஊழல் உள்ளிட்ட பல வழக்குகளிலும், ஊழல் செய்த பணத்தை வெளிநாட்டில் பதுக்கிய குற்றச்சாட்டிலேயே அருக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

இந்த குற்றச் செயலுடன் தொடர்புடைய அவரது பிரதமர் பதவி கடந்த ஆண்டு ஜூலை மாதம் பாகிஸ்தான் உயர் நீதிமன்றத்தால் பறிக்கப்பட்டது.

லண்டனில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டியிருப்பதாகவும் அவர் மீது புகார் கூறப்பட்டது. 

இதுதொடர்பான வழக்கில் நவாஸ் ஷெரீப்புக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது மேலும் 75 கோடி ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கணக்கில் வராத சொத்துக்களை கணக்கில் இட்டு பரிமுதல் செய்ய வேண்டும் என நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

குறித்த நிலையில் அவர் இன்று லண்டனில் இருந்து பாகிஸ்தானிற்கு திரும்புகிறார். மனைவியின் புற்றுநோய் சிகிச்சைக்காக லண்டனில் தங்கி இருந்தார். இன்று சில மணி நேரத்தில் அவர் பாகிஸ்தான் இஸ்லாமாபாத்திற்கு வந்தடைந்ததும் கைது செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.