சட்ட விரோதமான முறையில் தங்க துண்டுகளை மறைத்து  இலங்கைக்கு கடத்திவர முயன்ற இந்திய  பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் நேற்று கோலாலம்பூரிலிருந்து  UL 319 வகையான விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்துக்கு வந்து வெளியேறும் போது குறித்த நபரின் பயண  பொதியில் மறைந்து வைக்கப்பட்டிருந்த தங்க துண்டுகளை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.

இது குறித்து மேலும் தெரிவித்தாவது,

குறித்த நபர் அவரது பயண  பை, உள்ளாடை மற்றும் காலணிகளில் மறைத்தே தங்க துண்டுகளை இலங்கைக்குள் கடத்த முற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த சந்தேக நபர் தமிழ் நாட்டைச்  சேர்ந்த 28 வயதான நபரே என அதிகாரிகள் தெரிவித்தனர்.

சுங்க அதிகாரிகள் சோதனையிட்டபோது அவர்களிடமிருந்து சுமார்  18, 86, 625  ரூபா பெறுமதியான  290.25 கிராம் மதிக்கதக்க 9  தங்க துண்டுகள் மறைத்து வைத்திருந்ததாக சுங்க ஊடக செய்தித் தொடர்பாளர்  தெரிவித்தார்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டுவருவதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் தெரிவித்தனர்.