ரோகித் சர்மாவால் இந்தியாவுக்கு அசத்தல் வெற்றி

Published By: Vishnu

13 Jul, 2018 | 09:57 AM
image

பந்து வீச்சில் குல்தீப் யாதவின் வியூகம், ஆட்டத்தில் ரோகித் சர்மாவின் மிரட்டல், தலைமைப் பண்பில் விராட் கோஹலியின் விவேகம் ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து நேற்றைய தினம்  இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் வெற்றயீட்டியது.

அந்த வகையில் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டியின் முதலாவது போட்டி நேற்று இங்லாந்தின் ட்ரண்ட் பிரிட்ஜ் மைதானத்தில் இலங்கை நேரப்படி 5 மணிக்கு ஆரம்பமானது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணியை பணித்தது. இதற்கிணங்க இங்கிலாந்து அணி குல்தீப்பின் பந்து வீச்சினை எதிர்கொள்ள முடியாமல் 49.5 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இங்கிலாந்து அணி சார்பாக ஜோஸ் பட்லர் 53 ஓட்டங்களையும் பென்ஸ்டோக்ஸ் 50 ஓட்டங்களையும் ரோய் மற்றும் பிரிஸ்டோ தலா 38 ஓட்டங்களையும் அதிகபடியாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் குல்தீப் யாதவ் 25 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களையும் உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுக்களையும் சாஹல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினார்கள்.

269 என்ற வெற்றி இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் ரோகித் சர்மா மற்றும் தவான் ஜோடி 7 ஆவது ஓவர்களின் போதே 50 ஓட்டங்களை கடந்தது இந்திய அணிக்கு ஒரு பலமான அடித்தளத்தை உருவாக்கியது. 

பின்னர் 7.5 ஓவரில் அணியின் ஓட்ட எண்ணிக்கை 59 ஆக இருந்தபோது தவான் 40 ஓட்டங்களுடன் மொஹின் வீதிய பந்தில் ரஷித்திடம் பிடிகொடுத்து வெளியேறினார். இவரையடுத்து ரோஹித்துடன் இணைந்த விராட் தனது விவேகத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.

அந்த வகையில் இவர்கள் இருவரும் இணைந்து இங்கிலாந்து அணியின் பந்து வீச்சாளர்களை திணற வைத்தார்கள். ஒருபுறம் ரோகித் சர்மா சதமடிக்க மறுபுரம் அணியின் தலைவர் விராட் கோஹலி அரை சதமடித்தார்.

இவர்கள் இருவருமாக இணைந்து 167 ஓட்டங்களை பங்கிட்டுக் கொண்டனர். அதன் பின்னர் விரோட் கோஹலி 82 பந்துகளுக்கு 75 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ரஷித்துடைய பந்து வீச்சில் ஆட்டமிழந்தார்.

இதனையடுத்து களமிறங்கினார் ராகுல். அத்துடன் இங்கிலாந்து அணியின் விக்கெட்டுக்களை கைப்பற்றும் கனவு கலைந்து போனது. ரோகித் சர்மாவும் ராகுலும் கடைசி வரை ஆடி 40.1 ஓவர்ளின் நிறைவிலேயே இங்கிலாந்து அணி நிர்ணயித்த வெற்றி இலக்கை சுலபமாக கடந்தது.

இப் போட்டியில் ரோகித் சர்மா 114 பந்துகளில் 15 நான்கு ஒட்டங்களும் 4 ஆறு ஒட்டங்களும் அடங்களாக 137 ஓட்டங்களை பெற்றார். அத்துடன் போட்டியின் ஆட்டநாயகனாக குல்தீப் யாதவ் தெரிவானார்.

இங்கிலாந்து அணி சார்பில் மொஹின் அலி மற்றும் ரஷித் தலா ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். மேலும் இந்த போட்டியில் இந்திய அணி வெற்றியீட்டியதன் மூலம் தொடரில் 1:0 என்ற கணக்கில் முன்னிலையிலுள் உள்ளது. 

இங்கிலாந்து மற்றம் இந்திய அணிகளுக்கான இரண்டாவது ஒருநாள் போட்டி நாளை 14 ஆம் திகதி லண்டனிலுள்ள லோட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09