பட­குகள் ஒழுங்­கு­ப­டுத்தல் திருத்­தச்­சட்டத்தை அமுல்படுத்துங்கள்

Published By: Vishnu

13 Jul, 2018 | 08:45 AM
image

(எம்.நியூட்டன்)

வெளி­நாட்டுப் பட­குகள் ஒழுங்­கு­ப­டுத்தல் திருத்­தச்­சட்டம் மற்றும் உள்ளூர் இழு­வைப்­ப­ட­குகள் தடைச்­சட்டம் போன்­ற­வற்றை முறைப்­படி நடை­மு­றைப்­ப­டுத்­துங்கள் என வட­மா­காண கடற்­றொ­ழி­லாளர் இணையம் தெரி­வித்­துள்­ளது.

யாழ்.பாடி விடு­தியில் நேற்று நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பின்­போது வட­மா­காண கடற்­றொ­ழி­லாளர் இணை­யத்தின் செய­லாளர் வி.சுப்­பி­ர­ம­ணியம் தெரி­விக்­கையில்,

வட­மா­காண  கடற்­றொ­ழி­லாளர் எதிர்­நோக்கும் பிரச்­சி­னைகள், இந்­திய இழு­வைப்­ப­டகு விடு­விப்பு தொடர்­பா­கவும் இழுவை மடித்­தொ­ழிலால் ஏற்­படும் இழப்­புக்கள், மீன்­பிடி தொடர்பில் இயற்­றப்­பட்ட சட்­டங்கள், உள்ளூர் இழுவைப் பட­கு­களின் தாக்­கங்கள் மற்றும் சட்­ட­வி­ரோத மீன்­பி­டித்­தொ­ழில்கள், தென் பகுதி மீன­வர்களின் வட­ப­கு­தியை நோக்கிய அத்­து­மீ­றல்கள் என்­பன தொடர்பில் கடற்­றொழில் அமைச்­ச­ருடன் கலந்­து­ரை­யா­டினோம். 

இந்­தியா பல தட­வைகள் பல்­வேறு விட­யங்­களைக் கூறி­யுள்­ள­போதிலும் எவற்­றையும் நடை­மு­றைப்­ப­டுத்­த­வில்லை. தொடர்ந்தும் எம்மை ஏமாற்றி வரு­கின்­றது. இவ்­வா­றான சூழலில் தற்­போ­தைய கடற்­றொழில் அமைச்சர் விஜ­ய­முனி செய்சா பத­வி­யேற்ற பின்னர்  தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள இந்­திய பட­கு­களின் விடு­விப்பு தொடர்பில் அழுத்­தங்கள் மேலோங்கி நிற்­கின்­றன. 

இதில் எமது கருத்­துக்கள் என்ன என்று கேட்­டார்கள். குறிப்­பாக இந்­தியா எங்­களை பல­முறை ஏமாற்றி விட்­டது. எங்­க­ளுக்கு தந்த உறு­தி­மொழிகள் எவற்­றையும் நிறை­வேற்­ற­வில்லை. எனவே இந்­தி­யாவை நம்­ப­வேண்டாம். அவர்­களை நம்பி பேச்­சு­வார்த்­தைக்குச் செல்­ல­வேண்டாம். இதற்கு பரி­கா­ர­மாக கடந்த வருடம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வ­ரப்­பட்ட இழுவை மடிச் சட்டம் மற்றும் இந்த வருடம் கொண்டு வரப்­பட்ட வெளி­நாட்­டவர் படகு ஒழுங்­கு­ப­டுத்தல் திருத்­தச்­சட்டம் போன்­ற­வற்றை இதய­சுத்­தி­யுடன் நடை­மு­றைப்­ப­டுத்தி எல்லை தாண்­டி­வ­ரு­கின்ற இந்­திய இழுவைப் பட­கு­களை கைது­செய்தால் இழுவைப் பட­கு­களைத் தடுக்­க­ மு­டியும்.

குறித்த இரண்டு சட்­டங்­க­ளையும் முறை ­யாக நடை­மு­றைப்­ப­டுத்­தி­னால் இந்­தி ­யா­விடம் நாம் செல்­ல­வேண்­டிய தேவை யில்லை. மேலும்  இவ்விடயம் தொடர்பாக ஒரு குழுவை நியமித்து ஆராய்வோம் என்று தெரிவித்தார். இதற்கு நாங்கள் நியமிக்கின்ற நபர்களை குழுவாக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளோம். அதனை அமைச்சர் ஏற்றுக்கொண்டார் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58