ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனக்கு எதிரி அல்ல அவர் எனக்கு போட்டியாளர் மட்டுமே என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ரஷிய ஜனாதிபதி புதின் ஆகியோர் ஐரோப்பாவில் சந்திக்கவுள்ளனர். உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சந்திப்பு குறித்து டொனால்ட் ட்ரம்ப் கூறியதாவது:

“எனது ஐரோப்பிய பயணத்தின் போது ரஷிய ஜனாதிபதி புதினை சந்தித்து பேசுவது எளிதான ஒன்றாகவே இருக்கும். புதின் எனது போட்டியாளர்தான், எதிரி இல்லை. ஏன் ஒரு நாள் நானும் அவரும் நண்பர்களாக கூட ஆகலாம். இருப்பினும் புதின் எப்படிப்பட்டவர் என்பது பற்றி அவ்வளவாக எனக்கு தெரியாது என தெரிவித்துள்ளார்.

அத்தோடு புதினுடனான சந்திப்பின் போது, ஆயுத கட்டுப்பாட்டு விவகாரம், ஐ.என்.எப் ஒப்பந்தத்தை ரஷியா மீறுவது, புதிய ஒப்பந்தத்தை நீட்டிப்பது. உக்ரைன் விவகாரம், சிரியா விவகாரத்தில் தீர்வு காண்பது உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து ஆலோசனை செய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.