இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி குல்தீப்பின் யாதவ்வின் பந்துவீச்சினை எதிர்கொள்ள முடியாமல் 49.5 ஓவர்களிலேயே சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்று போட்டிகளை கொண்ட முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இங்கிலாந்தின் ட்ரண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமானது.

அந்த வகையில் நாணய சூழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி முதலில் துடுப்பெடுத்தாட இங்கிலாந்து அணியை பணித்தது. இங்கிலாந்து அணி சார்பாக ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கிய ஜோசன் ரோய் மற்றும் ஜோனி பிரிஸ்டோ ஜோடி இங்கிலாந்து அணிக்கு சிறந்த ஆரம்பத்தை கொடுத்தது.

இருவரும் இணைந்து 10.2 ஓவர்களுக்கு 71 ஓட்டங்களை பகிர்ந்து கொண்டனர். இந் நிலையில் இருப்பினும் குல்தீப் யாதவின் சுழலில் சிக்கிய ஜோசன் ரோய் 38 ஓட்டங்களை பெற்று வெளியேறினர்.

அதன் பின்னர் களமிறங்கிய ஜோய் ரூட்டையும் பிரிஸ்டோவையும் குல்தீப்பின் சுழல் புயல் விட்டு வைக்கவில்லை ரூட்டை 12 ஒட்டங்களுடனும் பிரிஸ்டோவை 38 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்கச் செய்து வெளியேற்றினார் குல்தீப்.

இதன் பின்னர் களமிறங்கிய அணியின் தலைவர் மொர்கன் 19 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை 19.2 பந்தில் சஹல் வீசிய பந்தில் ரய்னாவிடம் பிடிகொடுத்து ஆடுகளம் விட்டு நீங்கினார்.

இதன் பின்னர் ஜோடி சேர்ந்த பென்ஸ்டோக்ஸ் மற்றும் பட்லர் ஜோடி நிதானமாக துப்பெடுத்தாடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை சரிவிலிருந்து உயர்த்தி இங்கிலாந்து அணியை வலுவான ஒரு நிலைக்கு கொண்டு சேர்த்தது. 

இருப்பினும் பந்தை மறுபடியும கையில் எடுத்த குல்தீப் தனது பணியை மீண்டும் காட்ட ஆரம்பித்தார். இங்கிலாந்து அணியை சரிவிலிருந்து உயர்த்தி கொண்ட வந்த பென்ஸ்டோக்ஸ மற்றும் பட்லரின் ஜோடியை உடைத்தெறிந்தார். 

இதற்கிணங்க 38 ஓவரின் இறுதிப் பந்தில் குல்தீப்பின் பந்தில் சிக்குண்ட பட்லர் 5 நான்கு ஓட்டங்கள் அடங்களாக அரைசதத்தினை விளாசி 53 ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். இவரை தொடர்ந்து ஜோடியை இழந்த பென்ஸ் ஸ்டோக்கும் 50 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை குல்தீப்பின் பந்தில் ஆட்டமிழந்தார்.

இறுதியாக இங்கிலாந்து அணி  49.5 ஓவர்களின் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 268 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது. இதற்கிணங்க இந்திய அணிக்கு வெற்றி இலக்காக 269 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இந்திய அணி சார்பாக குல்தீப் யாதவ் 6 விக்கெட்டுக்களையும், உமேஷ் யாதவ் இரு விக்கெட்டுக்களையும் சாஹல் ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.