இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்தப்பட்டதாக கிடைத்த இரகசிய தகவலையடுத்து தமிழக மத்திய வருவாய் புலானாய்வு பிரிவினர் மேற்கொண்ட தேடுதலில் 5.5 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை  கைப்பற்றியுள்ளனர்.

இலங்கையில் இருந்து  சென்னைக்கு  கடல் வழியாக தங்கம் கடத்தப்படுவதாக தகவல் கிடைத்ததையடுத்து சென்னை, கோயம்பத்தூர்,  தூத்துக்குடியை சேர்ந்த மத்திய வருவாய் புலானாய்வு பிரிவினர் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் புதுக்கோட்டை பூதக்குடி சுங்கச்சாவடி அருகே சென்ற தனியார் பஸ்ஸினை நிறுத்தி சோதனையிட்ட போது  புதுக்கோட்டையை சேர்ந்த காஜமுதீன் மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த ஷாஜகான் ஆகியோரை கைது செய்துள்ளனர்.

இதனையடுத்த குறித்த இருவரிடமிருந்து 5.5 கோடி ரூபா மதிப்பிலான 17.83 கிலோகிரேம் தங்கத்தை பறிமுதல் செய்தனர். 

அதில் 16 கிலோகிரேம் சுத்த தங்கமும், 1.83 கிலோ உலோக கலப்படமுள்ள (சாதாரண) தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். 

மேலும் இந்த கடத்தலுடன் தொடர்புடைய சென்னை மண்ணடியை சேர்ந்த ஒருவரும் இன்று கைது செய்யப்பட்டள்ளதாக புலனாய்வு பிரிவினர் தெரிவிக்கின்றனர்.