ராமேஸ்வரம் பகுதியல் இருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ஒருத்தொகை கடலட்டைகளுடன் இந்தியப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ராமேஸ்வரம் அருகே சேராங்கோட்டை கடற்கரைப் பகுதியிலிருந்து  இலங்கைக்கு கடத்தவிருந்த   ரூபா 6 இலட்சம் மதிப்பிலான சுமார் 300  கிலோகிராம்  தடைசெய்யப்பட்ட அரியவகை கடல் அட்டைகளை கடற்படையினர் கைப்பற்றியதொடு குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.