சிறுத்தைக்குட்டி உயிருடன் மீட்பு

Published By: Digital Desk 4

12 Jul, 2018 | 06:30 PM
image

டயகம பகுதியில் தோட்ட தேயிலை மலையில் இருந்து சிறுத்தை குட்டியொன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம இலக்கம் ஒன்று தோட்டத்தில் தேயிலை மலையில் இருந்து இன்று மாலை 4.00 மணியளவில் சிறுத்தை குட்டியொன்றை பொது மக்கள் மற்றும் தோட்ட அதிகாரிகள்  உயிருடன் மீட்டு வனவளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த போது தேயிலை மலையில் மூன்று சிறுத்தை குட்டிகள் ஓடியதை கண்ட. தோட்டத்தொழிலாளர்கள்  ஒரு குட்டி மாத்திரம் பொது மக்களால் பிடிக்கப்பட்டு தோட்ட அதிகரிகளிடம் ஒப்படைத்த பின் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

அதனை தொடர்ந்து  நுவரெலியா வனவளத்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு அவர்களிடம் இந்த சிறுத்தை குட்டி ஒப்படைக்கப்பட்டது.

குறித்த தேயிலை மலையை சுற்றி சுமார் 10 கிலோமீற்றர் தொலைவில் பாரிய காடுகள் காணப்படுவதாகவும், அங்கிருந்து உணவு தேடுவதற்காக தனது தாய் சிறுத்தையுடன் வந்திருக்கலாம் என பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு மீட்கப்பட்ட சிறுத்தை குட்டி பிறந்து மூன்று மாதங்கள் பூரத்தியடைந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

அண்மைக்காலமாக மலையகத்தின் பல பகுதிகளில் சிறுத்தைகளின் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58