வட்ஸ்சப் குறுந்தகவல்களை மற்றவர்களுக்கு பரிமாறுவதன் மூலம் பாரிய அசௌகரியத்துக்கு முகம் கொடுக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வட்ஸ்சபில் வழங்கப்படும் புதிய  குறுந்தகவல் பரிமாற்றம் செய்யப்படுவதை சுட்டிக்காண்பிக்கிறது. இதனால் உங்களுக்கு வரும் குறுந்தகவல்கள் உண்மையாக டைப் செய்யப்படுகின்றதா அல்லது மற்றவர்களிடமிருந்து உங்களுக்கு பரிமாற்றம்  செய்யப்படுகிறதா என்பதை தெரிந்து கொள்ள முடியும்.

கடந்த மாதம் “என்ட்ரோய்ட பீட்டா” செயலியில் காணப்பட்ட இந்த அம்சம் உங்களுக்கு வட்ஸ்சப் செயலியில் வரும் பரிமாற்றம் செய்யப்பட்ட குறுந்தகவல்களில்  பரிமாற்றம்  என்ற குறியீடு இடம்பெறும். தற்சமயம் இந்த அம்சம் “என்ட்ரோய்ட்” மற்றும் ஐ.ஓ.எஸ் தளங்களில் உலகம் முழுக்க வழங்கப்படுகிறது.

புதிய அம்சம் மூலம் செயலில் பரப்பப்படும் போலி செய்திகளை குறைக்க இது காரணமாக இருக்கும். கடந்த வாரம் வட்ஸ்சபில் சந்தேகத்திற்கிடமான இணைப்பை சோதனை செய்யப்படுவது தெரியவந்தது.

குறித்த அம்சம் மூலம் வட்ஸ்சபில் பரப்பப்படும் இணைய முகவரிகள் போலியானதா என்பதை வட்ஸ்சப் தானாக கண்டறியும். இதை கொண்டு போலி தளங்கள் அல்லது தீங்கு விளைவிக்கும் வலைத்தளங்களை பயனாளர்கள் மிக எளிமையாக கண்டறிந்து கொள்ள முடிந்துள்ளமை தெரியவந்துள்ளது.