அய­ல­வரின் நாயுடன் தகாத  உறவில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் திரு­ம­ண­மான முன்னாள் படை­வீரர் ஒருவர் கைது­செய்­யப்­பட்ட விசித்­திர சம்­பவம் அமெ­ரிக்க டெக்ஸாஸ் மாநி­லத்தில் இடம்­பெற்­றுள்­ளது. 

பிலிப் சாமுவேல் மெர்கொன் (26  வயது) என்ற மேற்­படி படை­வீரர் பெல்மீட் பிராந்­தி­யத்­தி­லுள்ள தனது அய­ல­வரின் வீட்டு வள­விற்குள் அத்­து­மீறிப் பிர­வே­சித்து அய­ல­வ­ருக்குச் சொந்­த­மான கலப்­பின நாயுடன் தகாத உறவில் ஈடு­பட்­ட­தாக  தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் அது குறித்து பொலி­ஸா­ருக்கு உட­ன­டி­யாக அறி­விக்­கப்­பட்­ட­தை­ய­டுத்து பொலிஸார் சம்­பவ இடத்­திற்கு வந்­துள்­ளனர்.

இதன்­போது அந்தப் படை­வீரர்  நாயை கைவிட்டு அங்­கி­ருந்து தப்பிச் செல்ல முயற்­சித்­துள்ளார். இத­னை­ய­டுத்து பொலி­ஸாரால் மடக்கிப் பிடித்து கைது­செய்­யப்­பட்டு மக்­லெனன்  பிராந்­திய சிறைச்­சா­லையில் அடைக்­கப்­பட்ட அவர் பின்னர்  8,000 அமெ­ரிக்க டொலர் பிணையில் விடு­த­லை­யா­கி­யுள்ளார். 

அவர் வழக்கு விசா­ர­ணை­களின் முடிவில் இரு வரு­டத்­திற்கு மேற்­பட்ட கால சிறைத்­தண்­ட­னையை எதிர்­கொள்ள நேரிடும் என பிராந்­திய ­அதிகாரிகள் தெரி­விக்­கின்றனர்.