(எம்.எம்.மின்ஹாஜ்)

விடுதலை புலிகள் இயக்கதை மீள் உருவாக்க வேண்டும் என்ற கருத்துக்கு பூரண விளக்கமொன்றை பெற்றுத்தருமாறு கோரி ஐக்கிய தேசியக் கட்சியின் ஒழுக்காற்று குழு, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு கடிதமொன்றை விரைவில் அனுப்பவுள்ளதாக கட்சியின் நம்பகத்  தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.

இந்த கடிதத்திற்கு விஜயகலா மகேஸ்வரனிடம் இருந்து பதில் கிடைத்ததும் கட்சியினால் ஒழுக்காற்று விசாரணைகள்  ஆரம்பிக்கப்படவுள்ளதாக ஒழுக்காற்று குழுவின் முக்கியஸ்தர் ஒருவர் கேசரிக்கு தெரிவித்தமை குறிப்பிடதக்கது