(நா.தினுஷா) 

நாட்டில் இனவாத பிரசாரங்கள் தீவிரமடைந்து வருவது குறித்து கவலை வெளியிட்ட பெருந்தோட்ட கைத்தொழில்துறை அமைச்சர் நவீன் திஸாநாயக்க, அவ்வாறான பிரசாரங்களுக்கு அரசாங்கம் ஒரு போதும் இடமளிக்க போவதில்லை எனவும் அவ்வாறு மீண்டும்  அச்சுறுத்தல்கள் ஏற்படுமாயின் பாதுகாப்பு படையினரை கொண்டு முறியடிக்க அரசாங்கம் தயாராகவுள்ளதாகவும் தெரிவித்தார்.

தமிழீழ விடுதலை புலிகளை மீள் உருவாக்கும் செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை. விடுதலை புலிகளை நினைவு கூரும் கொண்டாட்டங்களுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவும் இல்லை.  வடக்கு, கிழக்கு பிரச்சினைகளை காரணம் காட்டி இலங்கையில் மீண்டும் இனவேறுபாடுகளை தோற்றுவிக்க முடியாது எனவும் சுட்டிகாட்டினார். 

இது தொடர்பில் அமைச்சர் திஸாநாயக்க தொடர்ந்து கூறுகையில்,

புதிய அரசியல் அமைப்பு சீர்த்திருத்தை தோற்கடிக்க வேண்டுமானால் நாட்டிற்கு பொறுத்தமான தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் , தமிழீழ விடுதலை புலியினரை மீண்டும் நினைவு கூரும் வகையிலான செயற்பாடுகளுக்கு அரசாங்கம் ஆதரவு வழங்குகின்றது எனும் இனவாதத்தை மீள் உருவாக்கும் வகையிலான எதிர்தரப்பினரின் பிரசார நடவடிக்கைகள் அதிகரித்து வருகின்றன.

இவ்வாறான பொறுப்பற்ற பிரசாரங்கள் எதிர்காலத்தில் நாட்டில் அச்சுறுத்தலை ஏற்படுத்தும். அவ்வாறு விடுதலை புலியினரை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் அனுமதி வழங்கவும் இல்லை. எதிர்காலத்தில் இனவாதத்தை தோற்றுவிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க போவதுமில்லை. 

ஜனநாயகத்தை போற்றும் நாடு என்ற வகையில் உரிமைகளுக்கு எந்தவிதத்திலும் தடைவிதிப்பது அரசாங்கத்தின் நோக்கமும் இல்லை. ஒவ்வொரு குடிமகனுக்கு தனக்கு தேவையானவற்றை நிறைவேற்றிக் கொள்வதற்கான உரிமை உள்ளது.

ஐக்கிய நாடுகள்  மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்காவை போன்று இலங்கையும் வெளியேற வேண்டும் என ஜி.எல். பீரிஸ் போன்றோர் கருத்து வெளியிட்டு வருகின்றனர். மனித உரிமைகள் பேரவையிலிருந்து அமெரிக்கா விலகிவிட்டது என்பதற்காக இலங்கை அவ்வாறு விலக வேண்டும் என்பதற்கான தேவைப்பாடு இல்லை. 

எதிர்வரும் வாரங்களில் புதிய நீதி கட்டமைப்புக்களை நிறுவுவதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த காலங்களில் அரசாங்கம் வழக்கு விசாரணைளில் காலதாமதம் படுத்தி வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது. பிழை இருப்பதை நாங்கள் ஏற்றுகொண்டாலும்  நீதி துறையில் தோற்றம்பெற்றுள்ள குறைபாடுகள் உள்ளிட்ட ஏனைய பிரச்சினைகளை மையமாக கொண்டு புதிய நீதிதுறை கட்டமைப்புக்களை உருவாக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 

தன் மீது உள்ள வழக்குகளை முதலில் விசாரிக்குமாறு கோத்தாபய ராஜபக்ஷ கோரிக்கை விடுத்திருப்பது கேளியாக இருப்பினும் ஒருபோதும் நீதிதுறையினதும் ஊடகத்தினதும் சுதந்திரத்தினை மீறும் வகையிலான செயற்பாடுகளுக்கு ஒருபோதும் இடமளிக்க போவதில்லை.

மேலும் ஜனாதிபதி தேர்தலுக்கு பொருத்தமான வேட்பாளர் தெரிவு செய்வதை மையமாக கொண்டு இனவாதத்தை தூண்டுவது ஏற்றுகௌ்ள முடியாது. 

ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை அறிவிப்பற்கான தேவைப்பாடுகள் எதுவும் இப்போது ஏற்படவும் இல்லை. தேவையான சந்தர்ப்பத்தில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் பொருத்தமான வேட்பாளரை அறிவிப்போம் என குறிப்பிட்ட அவர் போதைபொருள் கடத்தல் மற்றும் போதைபொருள் பயன்பாட்டில் குற்ற செயல்களுக்காக மரணதண்டனை அமுல்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.