இராமேஸ்வரம் மீனவர்களின் வழக்கு நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளதோடு புதிய மீன்பிடி சட்டத்திற்கான குற்றபத்திரிக்கை ஊர்காவற்றுறை  நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராமேஸ்வரம் மீனவர்களின் வழக்கு இன்று இரண்டாது முறையாக விசாரனைக்கு வந்ததது. குறித்த வழக்கை  விசாரித்த ஊர்க்காவற்றுறை நீதிபதி ஜீட்சன் வழக்கை நாளை விசாரிக்க உள்ளதாக கூறி ஒத்திவைத்தார்.

கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள் மீது வெளிநாட்டு மீன்பிடி சட்டத்தை அமுல் படுத்தவேண்டாம் என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் இந்தியாவிற்க்கான தூதரக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்

.இந்திய தரப்பில் தாக்கல் செய்த மனுவிற்க்கு இலங்கை ஊர்க்காவற்றுறை நீதிபதி ஜீட்சன் இந்த புதிய சட்டம் மீன்பிடி அமைச்சகத்தின் கீழ் வருவதால் மனுவை ஏற்றுக்கொள்ள முடியாது என தள்ளுபடி செய்துள்ளார் இதனையடுத்து மீனவர்கள் மீண்டும் யாழ்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.