அமெரிக்காவில் விற்பனை செய்யப்படும் 13 இலட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.    

சீனாவில் உற்பத்தியாகும் ஏராளமான பொருட்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்பட்டு வருகிற நிலையில் அமெரிக்க பொருட்களும் சீனாவில் விற்பனை செய்யப்படுகின்றன.

சமீபத்தில் அமெரிக்க பொருட்களின் விற்பனையை கட்டுப்படுத்தும் வகையில் சீனா, அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரியை விதித்தது.

சுமார் 2 இலட்சம் கோடி பொருட்களுக்கு இவ்வாறு வரி உயர்த்தப்பட்டது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சீனாவில் இருந்து அமெரிக்கா செல்லும் .2 இலட்சம் கோடி பொருட்களுக்கு அமெரிக்கா 25 சதவீதம் கூடுதல் வரி விதித்தது.

இதனால் இரு நாடுகளுக்கு மத்தியில் வர்த்தக ரீதியிலான மோதல் போக்கு உருவானது.

இந்த நிலையில் அமெரிக்காவில் விற்பனையாகும் 13 இலட்சம் கோடி மதிப்புள்ள சீன பொருட்களுக்கு 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

இந்த அறிவிப்பை அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ராபர்ட் லைத்தீசர் வெளியிட்டுள்ளார்.