சிவகார்த்திகேயன் நடிக்கவிருக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று ஆரம்பமாகிறது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் சீமராஜா படம் செப்டம்பர் 13ஆம் திகதி வெளிவரவுள்ளது. 

சிவகார்த்திகேயன் தற்போது ரவிக்குமார் இயக்கத்தில் விஞ்ஞானம் சம்பந்தப்பட்ட படத்தில் நடித்து வருகிறார். 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ரகுல் ப்ரீத் சிங் நடிக்கிறார். 

குறித்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் ஆரம்பித்த நிலையில், ராஜேஷ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியிருப்பதாக 24 ஏ.எம்.ஸ்டூடியோஸ் நிறுவனத்தின், ஆர்.டி.ராஜா அவரது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.வி.ஞானவேல் ராஜா தயாரிக்கும் குறித்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் சதீஷ் நடிக்கிறார். 

குறித்த படத்தில் இடம்பெறும் மற்ற கலைஞர்கள் விபரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.