முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பாராளுமன்ற உறுப்புரிமை பதிவயை பறிக்க வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நவீன் திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்தாவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே அவர் இதனை தெரிவித்துள்ளார். 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், 

விடுதலை புலிகளுக்கு ஆதரவாகவும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் விடுதலை புலிகளின் இயக்கம் மீண்டும் தோற்றம் பெற வேண்டும் என அவர் தெரிவித்த கருத்துக்கு எதிராகவே மேற்கண்ட கோரிக்கையை விடுத்துள்ளேன்.  

அத்துடன் இந்த சம்பவம் தொடர்பாக ஆராய்வதற்கான குழு நியமிக்கப்பட்டுள்ளது. அந்தக் குழுவின் விசாரணை அறிக்கை கிடைக்கப் பெற்றதும் இது தொடர்பில் மேலதிக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.