அநுராதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெகிராவ மற்றும் மதவாச்சி ஆகிய இருவேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துக்களில் இருவர் உயிரிழந்துள்ளதாக அநூரதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில் கெகிராவ ஒளுகரந்த சமூர்த்தி வங்கிக் அருகாமையில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலத்தகாயங்களுடன் வைத்தியசாலையில் அனுதிக்கப்பட்டு உயிரிழந்ததுடன் மதவாச்சி ஹொரவப்பொத்தானை பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவருமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.