ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் பணியாற்றிய தாதியொருவர் மருந்தில் விஷம் கலந்து இதுவரை 20 நோயாளிகளை கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டோக்கியோவில் அமைந்துள்ள வைத்தியசாலையில் தாதியாக பணியாற்றிய 31 வயதான அய்யூமி குபோகி என்பவர் கடந்த 2016 ஆம் ஆண்டு குறித்த பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார்.

இந்நிலையில் அவர் தாதியாக பணியாற்றிய போது, 88 வயது முதியவர் ஒருவருக்கு குளுக்கோசில் வி‌ஷத்தை கலந்து செலுத்தி அவரை கொலை செய்துள்ளமை தெரியவந்துள்ளது

இது தொடர்பில் அவரிடம் விசாரணைகள் மேற்கொண்ட போது அது உண்மை என தெரிவத்த அவர் இதுவரை 20 நோயாளிகளை இவ்வாறு மருந்தில் வி‌ஷம் கலந்து கொன்றதாக கூறியுள்ளார்..

அதிகம் தொல்லை தரும் நோயாளிகளை இவ்வாறு கொன்றதாக அவர் தெரிவித்தார். இந்நிலையில் குறித்த நபரை கைது செய்த பொலிஸார் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.