கொலம்பியாவில் 30 வரு டங்களுக்கு முன் இடம் பெற்ற எரிமலைக் குமுற லொன்றின் போது ஒருவரை யொருவர் பிரிந்து சென்ற இரு சகோதரிகள் தற்போது மீளவும் இணைந்துள்ளனர்.

1985 ஆம் ஆண்டு அர் மெரோ நகரில் ஜக்குலின் மற் றும் லோரெனா சான்செஸ் ஆகிய மேற்படி சகோதரிகள் வாழ்ந்த பிராந்தியத்திற்கு அருகிலுள்ள தொலிமா எரிமலை குமுறியபோது அவர்கள் இரு வரும் பிரிந்தனர்.

இந்த எரிமலைக் குமுறலில் அந்தப் பிராந்தியத்தில் வசித்த 20,000 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.

இதனையடுத்து ஜக்குலினும் லோரெனாவும் வெவ்வேறு குடும் பங்களால் தத்தெடுக்கப்பட்டு வளர்க்கப்பட்டனர்.

இந்நிலையில் ஜக்குலின், சமூக இணையத்தளத்தில் தனது சகோதரி லோரெனா எரிமலை அனர்த்தத்தில் காணாமல்போன தனது குடும்ப உறுப்பினர்கள் எவராவது உயிருடன் இருந்தால் அறியத் தருமாறு விடுத்திருந்த கோரிக்கையை அவதானித்து அவ ருடன் தொடர்பு கொண்டார்.

தொடர்ந்து மேற்படி பிராந்தியத்தில் அனர்த்தங்களால் பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவும் முகமாக செயற்பட்டு வந்த அர்மண்டோ அர்மெரோ மன்றம் என்ற தொண்டு ஸ்தாபனத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட மரபணு பரிசோதனைகளின் மூலம் அவர்கள் இருவரும் சகோதரிகள் என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.