இங்கிலாந்து, இந்திய அணிகளுக்கிடையிலான முதலாவது ஒரு நாள் போட்டி இன்று இங்கிலாந்தின் ட்ரண்ட் பிரிட்ஜ் கிரிக்கெட் மைதானத்தில் இலங்கை நேரப்படி மாலை 5.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. 

அந்த வகையில் இங்கிலாந்துக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இங்கிலாந்து அணியுடன் மூன்று இருபதுக்கு 20 போட்டி, மூன்று ஒரு நாள் போட்டி, ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது.

இதில் முதலாவதாக இடம்பெற்ற இருபதுக்கு 20 தொடரை இந்திய அணி 2:0 என்ற கணக்கில் கைப்பற்றியது.

இந் நிலையில் இன்று இடம்பெறும் முதலாவது போட்டியில் விராட் கொஹலி தலைமையிலான இந்திய அணி சார்பாக ரோஹித் சர்மா, தவான், விராட் கோஹலி, கே.எல்.ராகுல், தோனி, தினேஸ் கார்த்திக், சுரேஸ் ரய்னா, ஹர்த்தீக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் அல்லது சித்தார்த் கவுல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல் மற்றும் உமேஸ் யாதவ் ஆகியோர் களமிறங்கவுள்ளனர்.

மொர்கன் தலமையிலான இங்கிலாந்து அணி சார்பாக ஜோசன் ரோய், ஜொனி பிரிஸ்டோ, ரூட், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், மொஹின் அலி, டேவிட் வில்லி, லியாம் பிளன்கட், ரஷித் மற்றும் மார்க் வூட் ஆகியோரும் களமிறங்கவுள்ளனர்.