உத்தரபிரதேசத்தில் வெறிநாய்கள் கடித்ததில் சிகிச்சை பலனின்றி 8 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். 

உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டத்தில் உள்ள நன்தோஷி என்கிற கிராமத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் நேற்று முன்தினம் அருகிலுள்ள கோவிலுக்கு நடந்து சென்றுகொண்டிருந்தான். அப்போது அங்கு நின்றிருந்த வெறிநாய்கள் சில சிறுவனை விரட்டி சென்று கடித்து குதறியது. 

குறித்த சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு வந்த பொதுமக்கள் வெறிநாய்களை விரட்டி அடித்துவிட்டு, சிறுவனை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுவன்  உயிரிழந்துள்ளார்.