ஜேர்­மனி ரஷ்­யாவின் கைதி­யாக  உள்­ள­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி டொனால்ட் ட்ரம்ப் தெரி­வித்­துள்ளார்.

பெல்­ஜி­யத்தின் பிரஸல்ஸ் நக­ருக்கு விஜயம் செய்­துள்ள அவர் அங்கு இடம்­பெற்ற  நேட்டோ  உச்­சி­மா­நாட்­டிற்­காக அங்­கத்­துவ நாடு­களின் தலை­வர்­க­ளுடன்  ஒன்­று­கூ­டிய நிலை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

ஜேர்­மனி பாது­காப்பு அச்சம் கார­ண­மா­கவே ரஷ்­யா­வி­ட­மி­ருந்து இயற்கை வாயுவை  இறக்­கு­மதி செய்து வரு­வ­தாக  அவர் கூறினார்.

டொனால்ட் ட்ரம்ப்  நேட்டோ தலைவர் ஜென்ஸ் ஸ்ரோல்­டென்­பேர்க்­குடன் நேற்று புதன்­கி­ழமை காலை உணவின்போது  உரை­யா­டு­கையில்,   ரஷ்­யாவின்   முழு­மை­யான கட்­டுப்­பாட்டில் ஜேர்­மனி  இருப்­பது நேட்­டோ­விற்கு  மிகவும்   பாதிப்பை ஏற்­ப­டுத்தக்கூடிய ஒன்­றா­க­வுள்­ள­தாக  தெரி­வித்தார்.

ஜேர்­ம­னியால் இறக்­கு­மதி  செய்­யப்­படும் எரி­வா­யுவில் 70  சத­வீ­த­மா­னது  ரஷ்­யா­வி­லி­ருந்து இறக்­க­ுமதி செய்­யப்­ப­டு­வ­தாக ட்ரம்ப் குறிப்­பிட்டார். ஆனால் பிந்­திய உத்­தி­யோ­க­பூர்வத்  தர­வுகள் ஜேர்­மனி 50.75 சத­வீத இயற்கை வாயு­வையே  இறக்­கு­மதி செய்து வரு­வ­தாக தெரி­விக்­கின்­றன. 

 ஐரோப்­பிய நாடுகள் நேட்­டோவின்  செயற்­பா­டு­க­ளுக்கு போதி­ய­ளவில் நிதி­ய­ளிக்கத் தவ­றி­யுள்­ள­தாக  டொனால்ட் ட்ரம்ப்  குற்­றஞ்­சாட்­டி­யுள்ளார்.

ரஷ்ய ஜனா­தி­பதி விளா­டிமிர் புட்­டி­னுக்கும் டொனால்ட் ட்ரம்­பிற்­கு­மி­டை­யே­யான  முத­லா­வது உச்­சி­மா­நாடு  ஹெல்­ஸின்­கியில்  எதிர்­வரும் வாரம் திங்­கட்­கி­ழமை நடை­பெ­ற­வுள்ள நிலையில் அதற்கு  ஒரு வாரத்­திலும் குறைந்த காலத்தில் நேட்டோ நாடு­களின் இந்த உச்­சி­மா­நாடு இடம்பெற்­றுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­நி­லையில்  டொனால்ட் ட்ரம்பின்  ரஷ்யா தொடர்­பான அணு­கு­முறை  அமெ­ரிக்க நேச நாடு­க­ளி­டையே  பெரும் கவ­லையைத் தோற்­று­வித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. டொனால்ட் ட்ரம்ப்  தனது டுவிட்டர் செய்­தியில்  ஐரோப்­பா­விற்கு தின­சரி கண்­டனம்  தெரி­விப்­பதை வழக்­க­மாகக் கொண்­டுள்­ள­தாக ஐரோப்­பிய சபையின்  தலைவர்  டொனால்ட் ட்ரஸ்க்  குற்­றஞ்­சாட்­டினார்.

புட்­டி­னு­ட­னான சந்­திப்பு  யார்  உங்­க­ளது தந்­தி­ரோ­பாய நண்பன் என்­ப­தையும் யார் உங்­க­ளது தந்­தி­ரோ­பாய எதிரி என்­ப­தையும் அறிந்து கொள்­வ­தற்கு   தேவை­யா­க­வுள்­ள­தாக  டொனால்ட் ட்ரஸ்க் கூறினார்.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் மிகப் பெரிய பொரு­ளா­தார நாடா­க­வுள்ள  ஜேர்­ம­னி­யா­னது  நேட்டோ செயற்­பா­டு­க­ளுக்­கான தனது கட்டணப் பங்கை  செலுத்தத் தவ­றி­யுள்­ள­தாக நீண்ட கால­மாக அமெ­ரிக்க அர­சாங்­கத்தால் குற்­றஞ்­சாட்­டப்­பட்டு வரு­கி­றது.