இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொலிஸ் அதிகாரியை கழுத்துநெரித்து கொலை செய்தமை மற்றும் விசாரணைக்கு வந்த பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தயமை தொடர்பில் கைதுசெய்யப்பட்ட தேரரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார். 

நேற்யை தினம் கல்ஹெந்த விகாரைக்கு விசாரணைக்கு சென்றபோதே மேற்படி தேரர் பொலிஸ் அதிகாரியின் கழுத்தை நெரித்து கொலை செய்ததுடன் ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மீது குண்டுத் தாக்குதல் நடத்தினார். அதன் பின்னர் பொலிஸார் தேரர் மீது தாக்குதல் நடத்தி அவரை கைதுசெய்திருந்தனர்.

இந் நிலையில் அவரை இன்று இரத்தினபுரி நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது நீதிவான் சாலிய சந்தன அபேவர்த்தன தேரரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.