மேற்கிந்திய அணியுடனான தொடர் எங்களை தயார்படுத்தியுள்ளது. - ரொசேன் சில்வா

Published By: Rajeeban

11 Jul, 2018 | 09:33 PM
image

மேற்கிந்திய அணியுடனான தொடர் தென்னாபிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதற்கான மனோபலத்தை எங்களிற்கு வழங்கியுள்ளது என இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர் ரொசேன் டி சில்வா தெரிவித்துள்ளார்.

இலங்கை தென்னாபிரிக்க அணிகளிற்கு இடையிலான முதலாவது டெஸ்ட் நாளை காலியில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

டேல் ஸ்டெய்ன் ரபாடா பிலான்டர் மூவரும் எங்களிற்கு கடும் சவாலாக அமையப்போகின்றனர் என குறிப்பிட்டுள்ள அவர் ஆனால் என்னை பொறுத்தவரை மேற்கிந்திய அணிக்கு எதிரான தொடரே மிகவும் கடினமானது எனகுறிப்பிட்டுள்ளார்.

பங்களாதேஸ் அணி விளையாடும் விதத்தை பார்க்கும்போது மேற்கிந்திய தீவுகளின் ஆடுகளம் எவ்வளவு சவாலானது என்பது விளங்கும் அவர்கள் தங்கள் ஆடுகளங்களில் புற்களை நிறைய வைத்துள்ளார்கள்,மேலும் பிங் நிற பந்தை எதிர்கொள்ளவேண்டிய சவாலையும் சந்தித்தோம், அங்கு துடுப்பெடுத்தாடுவது மிகவும் கடினமானதாக காணப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

தென்னாபிரிக்க அணியில் மிகவும் வேகமாக பந்து வீசக்கூடியவர்கள் உள்ளதால் நாங்கள் ரிவேர்ஸ் ஸ்விங்கினை விளையாடுவதற்கு பயிற்சி எடுத்துள்ளோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எஸ்.எஸ்.சி.யின் 125 வருட கொண்டாட்ட விழா...

2024-03-28 13:22:56
news-image

பங்களாதேஷுடனான 2ஆவது டெஸ்ட்: உபாதைக்குள்ளான ராஜித்தவுக்குப்...

2024-03-28 13:22:16
news-image

19இன் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்...

2024-03-28 00:56:33
news-image

சாதனைகள் படைக்கப்பட்ட ஐபிஎல் போட்டியில் மும்பையை...

2024-03-28 00:04:56
news-image

சில்ஹெட் டெஸ்டில் தலா 2 சதங்கள்...

2024-03-27 22:22:22
news-image

இலங்கையில் மகளிர் ரி20 ஆசிய கிண்ண...

2024-03-27 22:09:33
news-image

குஜராத்தை வீழ்த்தி இரண்டாவது நேரடி வெற்றியை...

2024-03-27 01:34:06
news-image

ஐ.பி.எல் 2024 : குஜராத் டைட்டன்ஸ்...

2024-03-26 23:43:35
news-image

ஸ்ரீ லயன்ஸ் அழைப்பு வலைபந்தாட்டப் போட்டியில்...

2024-03-26 19:25:58
news-image

பூட்டானை வீழ்த்தியது இலங்கை : கால்பந்தாட்டத்திலிருந்து...

2024-03-26 16:48:31
news-image

சீன கால்பந்தாட்டச் சங்கத்தின் முன்னாள் தலைவருக்கு...

2024-03-26 11:53:22
news-image

ஐ.பி.எல் 2024 : பஞ்சாப் கிங்ஸை...

2024-03-26 00:02:20