குகையில் இருந்து மீட்கப்பட்ட கால்பந்து சிறுவர்களுக்கு ஜெர்சிகள் வழங்குவதற்காக முகவரியை  தருமாறு இங்கிலாந்து வீரர் வால்கர் கேட்டுக்கொண்டுள்ளார். 

தாய்லாந்து நாட்டில் கால்பந்து விளையாடும் 12 சிறுவர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளருடன் குகையில் சிக்கிக் கொண்டனர். 18 நாட்கள் குகையில் தவித்த அவர்களை மீட்புப்படையினர் பத்திரமாக மீட்டனர்.

சிறுவர்களை மீட்ட மீட்புக் குழுவினருக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன. இந்த செய்தி உலகக்கோப்பையில் விளையாடும் இங்கிலாந்து கால்பந்து அணியில் இடம்பிடித்துள்ள கைல் வால்கரையும் எட்டியுள்ளது.

அவர் தனது டுவிட்டரில், அனைத்து சிறுவர்களும் பத்திரமாக மீட்கப்பட்டது மிகவும் மகிழ்ச்சியான செய்தி. நான் அவர்களுக்கு எனது ஜெர்சியை அனுப்ப விரும்புகிறேன். அங்கே, யாராவது எனக்கு அவர்களுடைய முகவரியை அனுப்பு உதவி செய்ய முடியுமா? என்று பதிவிட்டுள்ளார்.