தனுஸ்கோடி அருகே மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இறந்த நிலையில் இன்று கரை ஒதுங்கிய  இராட்சத  டொல்பினை அதிகாரிகள் உடல் கூற்று பரிசோதனை செய்த நிலையில்  புதைத்துள்ளனர்.

தனுஷ்கோடி அருகே முகுந்த ராயர் சத்திரம்  கடல் பகுதியில்  அரியவகை கூன் முதுகு ஓன்கி  இனத்தைச் சேர்ந்த  டொல்பின் ஒன்று  கண் பகுதியில் காயம் அடைந்து இறந்த நிலையில் இன்று  கரை ஒதுங்கியுள்ளது. 

இதனையடுத்து அப்பகுதி மீனவர்கள் வனத்துறை  அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்ததையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள் கரை ஒதுங்கிய டொல்பினை கால் நடை வைத்தியர் மூலம் உடற்கூற்று பரிசோதனை செய்த பின் மணலில் புதைத்தனர்.