(எம்.எம்.மின்ஹாஜ்)

எரிபொருள் விடயத்தில் மக்கள் மீது அதீத பாரத்தை சுமத்த அரசாங்கம் விரும்பில்லை. தற்பேதைய விலை அதிகரிப்பு கூட பெற்றோலிய கூட்டுத் தாபனத்தின் கோரிக்கையின் அரைபங்காகும் என அமைச்சரும் அமைச்சரவை இணைப்பேச்சாளருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

சர்வதேச சந்தையில் எரிப்பொருளின் விலை அதிகரிக்கும் போது மாதத்திற்கு மாதம் விலையை அதிகரிப்பது அரசாங்கத்தின் நோக்கமல்ல. என்றாலும் எரிப்பொருள் விலை சூத்திரம் தொடர்பாக ஒவ்வொரு மாதமும் 10 ஆம் திகதி சிங்கப்பூர் சந்தையின் விலைக்கு ஏற்ப மீள்பரிசீலனை செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மேலும் எரிப்பொருள் விடயத்தில் மக்கள் மீது அதீத பாரத்தை சுமத்த அரசாங்கம் விரும்பவில்லை. தற்போதைய அதிகரிப்பு கூட பெற்றோலிய கூட்டுதாபனத்தின் கோரிக்கையின் அரை பங்காகும்.

எரிப்பொருளின் விலை உயர்வடையும் போது பஸ் கட்டணத்தை அதிகரிப்பதாயின் விலை குறைக்கும் போதும் அந்த சலுகையை மக்களுக்கு வழங்க தயாராக வேண்டும். அண்மையில் பஸ் கட்டணம் அதிகரித்தமையினால் குறிப்பிட்ட காலத்திற்கு கட்டணம் அதிகரிக்க மாட்டோம் என பஸ் சங்கத்தினர் ஒப்பந்தம் செய்துள்ளனர். அதனை மீற முடியாது என்றும் அவர் குறிப்பிட்டார்.