"நிலையான அபிவிருத்திக்கு வளங்களை தேடுவதே பாரிய சவால்"

Published By: Vishnu

11 Jul, 2018 | 06:00 PM
image

(நா.தனுஜா)

நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு பொருளாதார வளர்ச்சி அவசியமாகும். அதற்கான வளங்களைத் தேடிக்கொள்வதே பாரிய சவாலாக உள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.

 

இன்று இடம்பெற்ற 'நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை அடைவது' தொடர்பான தெற்காசிய நாடுகளின் சபாநாயகர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

பிரதமர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

உலக சனத்தொகையில் 25 சதவீதத்தினை தெற்காசிய பிராந்தியம் கொண்டுள்ளது. அத்தோடு வளர்ச்சியடைந்து வரும் பிராந்தியமாகவும் உள்ளது. எனவே தெற்காசிய பிராந்திய நாடுகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் விரைவானதொரு நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி பயணிக்க முடியும்.

நிலைபேறான அபிவிருத்தியை அடைய வேண்டுமெனில் பொருளாதார வளர்ச்சி காணப்பட வேண்டும். வலுவான பொருளாதார வளர்ச்சியினை ஏற்படுத்துவதற்கான வளங்களைக் கண்டறிவதே தற்போது தெற்காசிய பிராந்திய நாடுகள் எதிர்கொண்டுள்ள பெரும் சவாலாக உள்ளது. 

நாட்டின் அபிவிருத்தி சார்ந்த திணைக்களங்கள் சுயாதீனமாக செயற்படுவதன் மூலம் உரிய இலக்குகளை அடைய முடியும். அனைத்து நாடுகளிலும் சட்டங்கள் காணப்படுகின்றன. எனினும் அவற்றை நடைமுறைப்படுத்துவதில் பல நாடுகள் பின்னடைவை எதிர்கொண்டுள்ளன. 

எனினும் நாம் நிலைபேறான அபிவிருத்தியை நோக்கி செயற்படத்தக்க சட்டங்களை 19 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் மூலம் உருவாக்கியுள்ளோம். அதனூடாக சில அரச அமைப்புக்களை சுயாதீன ஆணைக்குழுக்களாக மாற்றியதனூடாக அபிவிருத்தியை நோக்கிய பயணிக்க முடியும் என்றார்.

இந்த மாநாட்டில் இந்தியா, பாக்கிஸ்தான், மாலைதீவூ, மற்றும் ஆப்கானிஸ்தான் பூட்டான் ஆகிய நாடுகளின் சபாநாயகர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44