சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 200 பில்லியன் டொலர் வரியை உயர்த்த அமெரிக்கா திட்டமிட்டுள்ளது.

சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிற 1,300 பொருட்களுக்கு 25% வரை வரி உயர்த்தி அமெரிக்கா  பொருட்களின் பட்டியலை வெளியிட்டது.

அமெரிக்காவின் நடவடிக்கைக்கு பதிலடியாக அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யக்கூடிய கார், விமானம் உள்ளிட்ட 106 பொருட்களுக்கு 25% அளவுக்கு வரியை உயர்த்தியது சீனா.

இந்நிலையில் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் சீனா பொருட்கள் மீதான வரி விதிப்பை 200 பில்லியன் டொலர் வரை அதிகப்படுத்த திட்டமிட்டு வருகிறார். 

அமெரிக்காவின் இந் நடவடிக்கையால் சீன சந்தைகள் பெருமளவு பாதிப்பை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது.