அவுஸ்திரேலியாவில் 600 கிலோ எடையுள்ள இராட்சத முதலையை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர். 

அவுஸ்திரேலியாவில் 600  வடக்கு பகுதியில் காத்ரீன் ஆறு உள்ளது. இங்கு மிகப்பெரிய அதிக எடையுடன் கூடிய இராட்சத முதலை வசித்து வந்தது. சமீபத்தில் அந்த முதலை பொதுமக்கள் வாழும் பகுதிக்குள் நுழைய கொஞ்சம் கொஞ்சமாக நகர்ந்து வந்தது.

இதனால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவானது. அதை தொடர்ந்து அவற்றை சுற்றுலா துறையினர் உயிருடன் பிடித்தனர்.

 5 மீற்றர் நீளமுள்ள ஆண் முதலை 600 கிலோ எடை உள்ளது. இது கடந்த 60 ஆண்டுகளாக உயிர் வாழ்கிறது. தற்போது அது முதலைகள் பண்ணையில் விடப்பட்டுள்ளது.