கிறபிக்ஸ் பணிகள் இறுதி நிலையை எட்டிவிட்டதால் நவம்பர் மாதம் 29 ஆம் திகதியன்று சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 2 பொயிண்ட் ஓ படம் வெளியாகும் என அப்படடத்தின் இயக்குநர் ஷங்கர் தன்னுடைய ட்வீட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். 

இயக்குநர் ஷங்கரின் படம் என்றால் பெரும் எதிர்பார்ப்பு இருக்கும். ஆனால் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,. பொலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர் அக்சய்குமார், கவர்ச்சி கண்ணழகி எமி ஜேக்சன் ஆகியோர் பங்குபற்றியிருக்கும் 2 பொயிண்ட் ஓ படத்திற்கு தற்போது பெரிய எதிர்பார்ப்பு இல்லை. ஏனெனில் இந்த படத்தின் வெளியீடு குறித்து இதுவரை பல முறை அறிவிப்பு வெளியாகிவிட்டன. 

ஆனால் சொன்ன திகதியில் வெளியாகவில்லை. அதற்கு வெளிநாட்டில் உள்ள கிறபிக்ஸ் கம்பனிகள் தான் காரணம் என தெரிவிக்கப்பட்டன.

இதனிடையே பெரும் எதிர்பார்ப்பில் வெளியான சுப்பர் ஸ்டாரின் காலா படம் அப்படத் தயாரிப்பாளர் போதிய அளவிற்கு விளம்பரம் செய்யாத காரணத்தால் வெற்றிப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கர் தற்போது அவருடைய இயக்கத்தில் உருவான எந்திரன் படத்தின் இரண்டாம் பாகமான 2 பொயிண்ட் ஓ படத்தை நவம்பர் 29 ஆம் திகதியன்று வெளியாகும் என்று அறிவித்திருக்கிறார்.

இந்த செய்தியை தெரிந்து கொண்ட ரஜினி ரசிகர்கள் வழக்கம் போல் இதனையும் ட்ரெண்டிங் ஆக்கிவிட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.