கொழும்பின் புறநகர பகுதிகளில் இன்று அதிகாலை முதல் வீசிய பலத்த காற்றினால் 150 க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

இதன்படி பிலியந்தலை, ஹோமாகம, மொறட்டுவை, தெஹிவளை மற்றும் கல்கிஸை ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் குறித்த பகுதிகளில் மரங்களும் முறிந்து விழுந்து போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்து பாதிப்படைந்ததாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் கொடிபிலி தெரிவித்துள்ளார்.