மாடு கடத்தலுக்கு உதவிய பொலிஸ் உத்தியோகத்தர் கைது 

Published By: Digital Desk 4

11 Jul, 2018 | 12:35 PM
image

முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து மாடுகளை வெலிஓயா ஊடாக திருகோணமலைக்கு கொண்டு செல்லும் முயற்சிக்கு உதவிய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரையும் மாடுகளை ஏற்றிய வாகனத்தையும் முள்ளிவளை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

இரண்டு குற்றவாளிகள் தப்பி ஓடியுள்ளாதாக முள்ளிவளை பொலீஸார் தெரிவித்துள்ளார்கள்.

இச்சம்பவம் குறித்து முள்ளியவளை பொலீஸார் மேலும் தெரிவிக்கையில் நேற்று இரவு முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவளை மற்றும் ஏனைய பகுதிகளில் இருந்து மாடுகள் கடத்தப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றது,

 புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலைய பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரின் உதவியுடன் 5 மாடுகளை ஏற்றிச் சென்ற இருவர் பயணித்த வாகனத்தை கொக்கிளாய் பகுதியில் வைத்து நேற்று இரவு 11.00 மணியளவில் பொலிஸார் மறித்துள்ளார்கள்.

இதன்போது குறித்த வாகனம் நிக்காமல் சென்றுள்ளது வாகனத்தில் சில்லுக்கு துப்பாக்கி சூடு நடத்தி வாகனத்தை நிறுத்தியுள்ளதுடன் அதில் இருந்த இருவரும் தப்பி சென்றுள்ளார்கள்.

இந்த மாடு கடத்தலுக்கு துணைபுரிந்த யாழ்ப்பாணத்தை சேர்ந்தவரும் புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் பணிபுரியும்  பொலீஸ் உத்தியோகத்தர் ஒருவரை முள்ளிவளை பொலீஸார் கைதுசெய்துள்ளார்கள்.

குறித்த வாகனமும் 05 மாடுகளும் கைதான பொலீஸ் அதிகாரியும் முள்ளியவளை பொலீஸ் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முள்ளியவளை பொலீஸார் தெரிவித்துள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53