கொழும்பு - லோட்டஸ் சுற்றுவட்ட வீதி ஆர்ப்பாட்டம் காரணமாக மூடப்பட்டுள்ளது.

அரச சேவை நிர்வாக அதிகாரிகள் பலதரப்பட்ட கோரிக்கைகளை முன்வைத்து மேற்கொண்டுள்ள ஆர்ப்பாட்டத்தின் காரணமாகவே காலி முகத்திடல் சுற்று வட்டப் பகுதியினுடாக  லோட்டஸ் வீதிக்கு பயணிக்கும் பாதை வீதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஆர்ப்பாட்டத்தின் காரணமாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதால் சாரதிகளை மாற்று வீதியை பயன்படுத்துமாறு போக்குவரத்து பொலிஸர் கேட்டுக்கொண்டுள்ளனர்.