''ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கராவின் உருவச்சிலை திறந்து வைப்பு''

Published By: Daya

11 Jul, 2018 | 09:45 AM
image

ஜனாதிபதி அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள தேசிய வீரர்களின் உருவச்சிலைக்கிடையே புதிதாக இணைந்து கொண்டுள்ள இலவசக் கல்வியின் தந்தையும் மத்திய கல்லூரி எண்ணக்கருவின் தோற்றுவிப்பாளருமான சீ.டபிள்யு.டபிள்யு. கன்னங்கராவின் உருவச்சிலையை ஜனாதிபதி நேற்று திறந்து வைத்தார்.

சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரவுக்கு அதியுயர் கௌரவத்தை அளிக்கும்வகையில் ஜனாதிபதி அலுவலகத்தினதும் அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தினதும் நெறிப்படுத்தலில் இந்த உருவச்சிலை நிர்மாணிக்கப்பட்டுள்ளது.

இலவச கல்வியின் தந்தையென புகழாரம் சூட்டப்பட்டுள்ள சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கரா நம் நாட்டின் கல்வித்துறைக்கு ஈடிணையற்ற அரும்பணியாற்றியுள்ளார். 

ஏகாதிபத்தியவாதிகளுடன் இணைந்து வரப்பிரசாதங்களை அனுபவித்த பலரது எதிர்ப்புகளுக்கு மத்தியில் தமது வாழ்க்கையை பணயம் வைத்தே கன்னங்கர நம் நாட்டிற்கு சகல வெற்றிகளையும் பெற்றுத்தந்தார். 

அப்போதிருந்த பௌத்த தேரர்களும் பௌத்த தலைவர்களும் மனித நேயமிக்கவர்களும் அவருக்கு உறுதுணையாக இருந்ததுடன், தாமதமின்றி விடுதலை பெற வேண்டிய எமது தேசம் மீண்டும் பிறரிடம் கையேந்தாது, பிறரை சார்ந்திருக்காத வகையில் அபிமானத்துடன் கட்டியெழுப்பப்பட வேண்டும் எனவும் அதனை கல்வியினூடாகவே நிறைவேற்ற முடியும் எனவும் அவர் உறுதியாக நம்பினார்.  

அதன் பெறுபேறாகவே இலவச கல்விக்கொள்கையும் மத்திய கல்லூரி பற்றிய எண்ணக்கருவும் கிடைக்கப்பெற்றது. 

விடுதி வசதியுடன் கூடிய மத்திய கல்லூரிகளை உருவாக்கி, கிராமங்களை மையமாகக்கொண்ட பல்கலைக்கழகங்களாக அவற்றை மாற்றியமைக்க கன்னங்கராவே முன்னோடியாக செயற்பட்டார். ஒவ்வொரு தேர்தல் பிரிவுகளிலும் குறைந்தது ஒரு மத்திய கல்லூரி என்றவகையில் விடுதிகள், தொழில்நுட்ப பயிற்சி வசதிகள், விளையாட்டு மைதானம் மற்றும் நூலகங்கள் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்ட உயர் கல்வியை வழங்கும் மத்திய கல்லூரிகளை அமைக்க அவரே முன்னோடியாக செயற்பட்டார்.

சீ.டபிள்யு.டபிள்யு கன்னங்கராவின் உருவச்சிலையை திறந்துவைத்த ஜனாதிபதி உருவச் சிலைக்கு மலரஞ்சலி செலுத்தினார். 

அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில், அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் தர்மசேன கஹதவ வரவேற்புரை ஆற்றியதுடன், அமைச்சர் வஜிர அபேவர்த்தனவும் நிகழ்வில் உரையாற்றினார். அகில இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் சங்கத்தின் சார்பில் முன்னாள் அமைச்சின் செயலாளர் சட்டத்தரணி ஏ.பி.ஏ.குணசேகர கருத்து தெரிவித்தார். 

சியம் நிக்காயவின் கோட்டே ஸ்ரீ கல்யானி சாமக்ரி தர்ம மகாசங்க சபையின் மகாநாயக்கர், ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் வேந்தர் கலாநிதி வண. இத்தேபானே தம்மாலங்கார நாயக்க தேரர், எதிர்க்கட்சித் தலைவர் ஆர்.சம்பந்தன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், சீ.டபிள்யு.டபிள்யு.கன்னங்கராவின் குடும்ப உறுப்பினர்கள் உள்ளிட்ட அதிதிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04