இரத்தினபுரி, கல்ஹெந்த விகாரைக்கு விசாரணைக்கு சென்ற பொலிஸ் அதிகாரியொருவரை விகாரையிலுள்ள தேரர் ஒருவர் கழுத்து நெரித்து கொலை செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்தார்.

இரத்தினபுரி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் குறித்த பொலிஸ் அதிகாரி விசாரணைக்காக கல்ஹெந்த விகாரைக்கு சென்றபோது அங்கிருந்த தேரர் ஒருவால் கழுத்து நெரித்து தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டும் செல்லும்போது பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

மேலும் குறித்த தேரர் அங்கிருந்த ஏனைய பொலிஸ் அதிகாரிகள் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தயுள்ளதாகவும் அதன்பின்னர் பொலிஸார் தேரர் மீது தாக்குதல் நடத்தி அவரை கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர மேலும் தெரிவித்தார்.