"இனவாதம் பேசுவோரால் அரசியல் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது"

Published By: Vishnu

10 Jul, 2018 | 04:54 PM
image

(இரோஷா வேலு) 

முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் கருத்தினை புரிந்துகொள்ளாமல் இனவாதம் பேசி அரசியல் இலாபமடைய முயற்சிப்பவர்களின் செயற்பாடுகளினால் அரசியல் இன்று கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ளது என்று தேசிய பிக்குகள் முன்னணியின் பொதுச் செயலாளர் வகமுல்ல உதித்த தேரர் தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

மக்கள் பிரதிநிதிகள் எவரும் மக்கள் பிரதிநிதிகளாக நடந்து கொள்வது கிடையாது. ஊடகங்களை திறந்தால் எங்காவது ஒரு அரசியல்வாதி சட்டவிரோதமாக பெற்றுக்கொண்ட நிதி தொடர்பிலும் நாட்டில் இடம்பெற்ற போதைப்பொருள் வர்த்தகம், கொள்ளை, கொலை மற்றும் கற்பழிப்பு தொடர்பாகவுமே காணக்கிடைக்கின்றது.

இது குறித்து வெட்கப்பட வேண்டிய அரசியல்வாதிகள், ஒருவரின் வெளிக்கூற்றை பெரிதுபடுத்தி அதன் ஆழமான கருத்தை உணர மறந்தும், மறுத்தும்விட்டனர். இவர்கள் அக்கூற்றை கொண்டு தங்கள் தவறை மறைப்பதற்கும், நியாயப்படுத்துவதற்கும் முனைகின்றனர்.

இவர்களுள் சிலர் தங்களை பெளத்தர்களாக காட்டிக்கொண்டு புத்த புராணம் பாடுகின்றனர். இவர்கள் எவறும் பெளத்த மத கோட்பாடுகளை பின்பற்றவில்லை என்பதே உண்மை. சுய அரசியல் நலன்களுக்காக சில சட்டங்களை இயற்றி இவர்கள் இலாமடைந்து வருகின்றனர்.

இவ்வாறானர்கள் காணப்படும் இந்த நாட்டில் நிறைவேற்று அதிகாரத்தை ஜனாதிபதியின் கையில் கொடுப்பதினால் நாம் எவ்வாறான இன்னல்களுக்கு முகங்கொடுக்க வேண்டிவரும் என்பதை சொல்ல தேவையில்லை. 

எனவே தான் 20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் அகற்றப்பட வேண்டும் என்பதை நாம் ஆதரிக்கின்றோம் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்