(இரோஷா வேலு)

கொழும்பில் இருவேறு பகுதிகளில் ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

இது குறித்து மேலும் தெரிவிக்கப்படுவதாவது, 

கொழும்பில் இருவேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் பணிகளின் போது ஹெரோயின் போதைப்பொருளுடன் பெண்கள் இருவர் நேற்று கைதுசெய்யப்பட்டுள்ளனர். 

கிராண்பாஸ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகம்புற பகுதியில் வைத்து மேல்மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால், 10 கிராம் 150 மில்லிகிராம் ஹெரோயினை தம்மிடம் வைத்திருந்த குற்றச்சாட்டில், 38 வயதுடைய பெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் நேற்று மாளிகாகந்த நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதவான் அவரை எதிர்வரும் 24 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார். 

மேலும் இன்னுமொருவர் கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ரத்மலானை பகுதியில் வைத்து 5 கிராம் 2 மில்லிகிராம் ஹெரோயினுடன் கல்கிஸ்ஸை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். 

இச்சம்பவத்தில் ரத்மலானையை சேர்ந்த 26 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார். இவரையும் நேற்று கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.