சர்க்கார் படத்தில் இளைய தளபதி விஜய் காதில் கடுக்கணுடன் தோன்றும் காட்சியை அப்படத்தில் நடித்திருக்கும் நடிகை வரலட்சுமி வெளியிட்டிருக்கிறார்.

துப்பாக்கி, கத்தி ஆகிய படங்களைத் தொடர்ந்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் இளைய தளபதி விஜய் நடித்து வரும் படம் சர்கார். இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் குறித்து தமிழக அரசியல் கட்சியொன்று நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, அந்த படத்தைப் பற்றி தற்போதே பெரியி அளவில் விளம்பரம் செய்திருக்கிறது. 

ஏற்கனவே மெர்சல் படத்திற்கு அரசியல் கட்சிகளின் எதிர்ப்பால் அப்படம் பெரிய வெற்றியைப் பெற்றது. அதைப் போன்ற எதிர்ப்பு தளபதியின் ஃபர்ஸ்ட் லுக்குக்கே வந்திருப்பதை அவரது ரசிகர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். 

எங்கள் தலைவர் எது செய்தாலும் அது விமர்சிக்கப்படும். ஏனெனில் அவருடைய ரசிகர்களின் பலத்தை அனைவரும் உணர்ந்திருக்கிறார்கள் என்று சந்தோஷப்படுகிறார்கள்.

இந்நிலையில் இந்த படத்தின் படபிடிப்பு சில நாள்களாக சென்னையின் புறநகரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதை முடித்து அமெரிக்கா சென்று படமாக்கவிருக்கிறார்கள். அத்துடன் படபிடிப்பு முடிந்துவிடும் என்று தகவல் தெரிவித்திருக்கிறார்கள் படக்குழுவினர்.