வியத்தகு சாதனை புரிந்த இலங்கை மருத்துவர்கள்

Published By: Raam

26 Feb, 2016 | 05:49 PM
image

பிறப்பிலே முள்ளந்தண்டு வளைந்திருந்த பாடசாலை மாணவனை  சத்திர சிகிச்சையின் மூலம் மீண்டும் சாதாரண நிலைமைக்கு கொண்டு வந்து சாதனை புரிந்துள்ளனர் இலங்கை மருத்துவர்கள்.

காலி கரம்பிடிய வைத்தியச்சாலையிலே இந்த சத்திரசிகிச்சை மேல்கொள்ளபட்டுள்ளது. இரண்டு கட்டமாக நடந்த இந்த சத்திரசிகிச்சையின் பின் குறிந்த மாணவனுக்கு வழங்கப்பட்ட விஷேட மருத்துவ உடையின் உதவியுடன் நிமிர்ந்து சாதாரண மனிதர்களை போல் நடக்க முடிகின்றது.

இந்த சத்திரசிகிச்சைக்கு முன்  அசங்க பியமால் என்ற அந்த மாணவன் ஒரு பக்கமாக சாய்ந்து தான் நடப்பார். இந்த வருடம் கா.போ.த சாதாரணத் தர பரீட்சை தோற்ற உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த சத்திர சிகிச்சையை பற்றி தெரிவித்த நரம்பியல் விஷேட வைத்தியர் திபால் அத்தநாயக ,  சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்னர் அவருக்கு இச் சத்திர சிகிச்சையை செய்யகூடியவாறு உள்ளதா என்று ஆராய்வோம். 17 வயது தொடக்கம் 21 வயதெல்லையிலேயே எலும்புகள் தொடர்பான சத்திரசிகிச்சைக்கு மிகவும் உகந்த காலமாகும். அவ்வயதிலே எலும்புகள் ஒன்றுடன் பொறுதுவது இலகு, இந்த மாணவனின் வயது 17 என்பதால் இந்த சத்திரசிகிச்சை இலகுவாக செய்ய கூடியதாக இருந்தது. 

இரண்டு கட்டமாக நடந்த இந்த சத்திரசிகிச்சையில் முதலில் அந்த மாணவனின் எலும்புகூட்டை பிரித்து அவனின் வளைந்த எலும்பை முற்றாக அகட்டினோம்.

 இரண்டு வாரத்திற்கு பின்  மாணவனுக்கு செய்த முதல் சத்திரசிகிச்சையிலிருந்து குணமாகியதன்  பின்னே அடுத்த கட்ட சத்திரசிகிச்சைக்கு சென்றோம்.

அவ்வேளை அவனின் முதுகு புறத்தில் சிகிச்சை மேற்கொண்டு இரண்டு உலோகத் தகடுகளை பயன்படுத்தி அம் மாணவனின் முதுகு வளைவை சரிசெய்தோம். இச்சிகிச்சையில் 100 வீதம் சரிசெய்ய முடியாவிட்டாலும் முடிந்தளவு அம்மாணவனின் முதுகு வளைவை சரிசெய்துள்ளோம் என்று கூறினார்.    

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47